1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: சனி, 21 மார்ச் 2026 (12:21 IST)

இனிமே Censor - தணிக்கை வார்த்தையே யூஸ் பண்ணாதீங்க!.. கமல்ஹாசன் கோரிக்கை...

kamal
தணிக்கை வாரியம் என்பது மத்திய அரசின் கீழ் வருகிறது. அதாவது மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு துறை.. ஒவ்வொரு மொழி திரைப்படங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள் இருப்பார்கள். இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களை அந்த வாரியத்தின் அதிகாரிகள் பார்ப்பார்கள்..

தணிக்கை வாரியத்தில் பல விதிமுறைகள் இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக காட்சிகளோ, வசனங்களோ இருந்தால் அதை நீக்க சொல்வார்கள்.. அதுதான் அவர்களின் வேலை. அதேபோல் மக்களுக்கு தவறான கருத்துக்களை சொல்லும் காட்சிகள் மற்றும் ஆபாச வசனங்களுக்கும் மியூட் போடுவார்கள்.. தணிக்கை வாரியம் சொன்ன மாற்றங்களை இயக்குனர் செய்த பின் சான்றிதழை கொடுத்து விடுவார்கள்.. அதேபோல், நீக்க சொல்லும் ஒரு காட்சிக்கு சரியான காரணத்தை இயக்குனர் சொல்லி வாதிட்டால் அந்த காட்சியை அனுமதிப்பார்கள். சில திரைப்படங்கள் தணிக்கையில் சிக்கி வெளிவராமலேயே போயிருக்கிறது.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கூட தணிக்கையில் சிக்கியிருக்கிறது.. கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய கடந்த ஜனவரி 9ம்தேதி வெளியாகவிருந்த இந்த திரைப்படம் இப்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான், நடிகரும் எம்.பி-யுமான கமல்ஹாசன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்..

ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு.  பல வருட விவாதங்களுக்குப் பின் censor என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம்.  Central board of film certification.

சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்.  திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.