ஜனநாயகன் படத்தை கிடப்பில் போட்ட கேவிஎன் நிறுவனம்!. விஜய் ஃபேன்ஸ் பாவம்..
பெங்களூரை சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். கன்னட படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வந்தது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை இந்த நிறுவனம் தயாரித்திருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி 9ம் தேதி இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் நான்கு மாதங்களாகியும் இப்போது வரை ஜனநாயகன் வெளியாகவில்லை. அதோடு எப்போது ரிலீஸ் என்கிற தேதியையும் இந்த நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. இப்போது இப்போது வரை படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்து விட்டதா என்கிற தகவலும் வெளியாகவில்லை..
ஏற்கனவே ஜனநாயகன் முழு படம் சில இணைதளங்களில் லீக் ஆனது. எனவே படத்தை கண்டிப்பாக விரைவில் வெளியிட்டு விடுவார்கள் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி படம் வெளியாகவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பின் கண்டிப்பாக படம் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இப்போது வரை பட அறிவிப்பு வெளியாகவில்லை.
கேவிஎன் நிறுவனமோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். நேற்று ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறோம் என கேவிஎன் நிறுவனம் சொன்னது. எனவே ஜனநாயகன் ரிலீஸ் தேதியைத்தான் சொல்லப் போகிறார்கள் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால் சிரஞ்சீவியை வைத்து கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்புதான் வெளியானது. இது விஜய் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது..
ஏற்கனவே கேஜிஎப் பட புகழ் யாஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் படத்தை தயாரித்து வைத்திருக்கிறது கேவிஎன் நிறுவனம். இந்த படமும் ரிலீஸாகாமல் முடங்கி கிடக்கிறது. இப்படி மற்ற படங்களின் வேலையில் பட நிறுவனம் ஈடுபட்டிருப்பதால்தான் ஜனநாயகன் படம் கிடப்பில் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது. எப்படியும் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாகலாம் என கணிக்கப்படுகிறது..