1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2026 (20:36 IST)

எங்கே என் பங்குன்னு கேட்க மாட்டேன்!.. தேர்தலில் போட்டியில்லை!.. கமல் அறிவிப்பு!...

kamal stalin
நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் நீதி மையம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவங்காத நிலையில் கமல் தைரியமாக அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.கட்சி துவங்கியபோது எல்லோரையும் போல கமலும் திமுகவை கடுமையாக விமர்சிக்க துவங்கினார். ஒருபக்கம் அதிமுக மீதும் விமர்சனங்களை வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்டார் கமல்ஹாசன். ஆனால் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்..

சென்னை உள்ளிட்ட சில தொகுதிகளில் மக்கள் நீதி மையம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை வாங்கினாலும் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் அந்த கட்சி வெற்றிபெறவில்லை. எனவே, களநிலவரத்தை புரிந்து கொண்ட கமல் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க துவங்கினார். இதன் காரணமாக அவருக்கு எம்பி பதவியும் கிடைத்தது. தன்னுடைய எண்ணத்தை விட தற்போது நாடுள்ள  சூழ்நிலைக்கு திமுகவை ஆதரிப்பதுதான் சரி என்பதே என் நிலைப்பாடு என கமல் விளக்கம்ளித்தார்..

2026 சட்டமன்ற தேர்தலில் பொருத்தவரை திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மையமும் இருக்கிறது. ஆனால் இதுவரை அந்த கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில்தான், 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடாது என கமல் அறிவித்திருக்கிறார்..

அதே நேரம் திமுகவுக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்போம் எனவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளம் அல்ல.. இது தியாகம் அல்ல.. கடமை.. சுயநலமல்ல.. புதுமை’ என பதிவிட்டிருக்கிறார்..