1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 மார்ச் 2026 (08:47 IST)

உங்க வேலையை மட்டும் பாருங்கள்: ட்ரம்புக்கு கமல்ஹாசன் பதிலடி! நெட்டிசன்கள் ரியாக்சன்..!

உங்க வேலையை மட்டும் பாருங்கள்:  ட்ரம்புக்கு கமல்ஹாசன் பதிலடி! நெட்டிசன்கள் ரியாக்சன்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சமீபத்திய அதிரடி உலக அரசியல் நகர்வுகள் குறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மக்களாகிய நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தேசத்தை சேர்ந்தவர்கள். வெளிநாடுகளிடமிருந்து வரும் உத்தரவுகளை நாங்கள் ஏற்பதில்லை. உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள்" என ட்ரம்புக்கு செய்தி சொல்லியுள்ளார்.
 
மேலும், இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையே பரஸ்பர மரியாதை இருந்தால் மட்டுமே உலகளாவிய அமைதி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இருப்பினும், கமலின் இந்த பதிவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். "அமெரிக்க அதிபரை மிரட்ட தெரிந்த கமலுக்கு, தமிழகத்தில் திமுக ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்ட ஏன் பயம்?" என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 
 
சர்வதேச அரசியலில் குரல் கொடுக்கும் கமல், உள்ளூர் அரசியல் பிரச்சினைகளில் மௌனம் காப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 
Edited by Siva