1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kallakurichi ADMK poster conttrovercies

கழக பணியாற்ற வாங்க சின்னம்மா! – கள்ளக்குறிச்சியில் அதிமுக போஸ்டரால் பரபரப்பு!

Tamilnadu
அஇஅதிமுகவை வழிநடத்த சசிக்கலா வரவேண்டி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் அறிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினருக்கு சசிக்கலா அடிக்கடி செல்போனில் பேசிய விவகாரம் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சமீப காலமாக சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுகவினரை கட்சி தலைமை கட்சியிலிருந்து நீக்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சியில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”அஇஅதிமுக பொது செயலாளர் தியாக தலைவி சின்னம்மா அவர்களை கழக பணியாற்றிட வருமாறு மாபெரும் மனித சங்கிலி கவன ஈர்ப்பு போராட்டம்” என்று அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
85 சதவீதம் கல்வி கட்டணம்; 6 தவணைகள் – தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!