1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. k.bhagyaraj final ride started from nungambakkam

கே.பாக்யராஜின் இறுதி ஊர்வலம் துவங்கியது!.. போலீசார் அணிவகுப்பு மரியாதை!...

k.bhagyaraj
நடிகர், இயக்குனர், திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜுக்கு நேற்று காலை 8.30 நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் அங்கேயே மரணமடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து நேற்று அவரின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, ரஜினி, கமல், முதல்வர் விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் மற்றும் மணிரத்னம், முருகதாஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல இயக்குனர்களும் நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தற்போது பாக்யராஜின் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் துவங்கியிருக்கிறது. போலீசார் அணிவகுப்பு மாரியதையும் கொடுக்கப்பட்டது. பெசண்ட் நகர் மின் மன்மாயனத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்படவிருக்கிறது. அங்கு பாக்யராஜின் உடலுக்கு அரசு மாரியாதை செய்யப்பட்ட பின் அவரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
போலியோ சொட்டு மருந்து முகாம்!.. துவங்கிவைத்த முதல்வர் விஜய்!...