தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவுடன் கூட்டணி இல்லை, ஆனால் தேசிய அளவில் கூட்டணி தொடரும்: அண்ணாமலை
- அடுத்தடுத்து அதிமுக வேட்பாளர் பட்டியல்; கூட்டணி என்னாச்சு? – அதிர்ச்சியில் பாஜக!
- பந்தல் போட கூட அனுமதி தராத திமுக அரசு - சீமான் காட்டம்!
- நாடாளுமன்ற கூட்டத்தொடர்; நீட் விலக்கு மசோதாவை வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டம்!
- அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறது? தனித்து போட்டியிட பாஜக முடிவு!
ஜோதிமணி எம்பியை வெளியே போ என கூறிய திமுக நிர்வாகிகள்: பெரும் பரபரப்பு!
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுக நிர்வாகிகள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜோதிமணி எம்பியை திடீரென திமுக நிர்வாகிகள் வெளியே போ என கூறியதாக தெரிகிறது
இதனை அடுத்து நான் என்ன விருந்து சாப்பிடவா வந்துள்ளேன்? அலுவலகத்திற்கு வர சொல்லிவிட்டு இப்படி அசிங்க படுத்துகிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதையா என ஆவேசமாக பேசிய ஜோதிமணி எம்பி கூட்டணி பேச்சு வார்த்தையில் இருந்து வெளியே வந்தார்
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கேட்கும் இடங்களை திமுக தர மறுப்பதாகவும் இதனால் ஜோதிமணி ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
