திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 31 ஜனவரி 2022 (11:37 IST)

அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறது? தனித்து போட்டியிட பாஜக முடிவு!

அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென நேற்று இரவு அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுக பாஜக கூட்டணி உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி சேலம் பயணம் செய்ததாகவும் அதனால் இன்றைய பேச்சுவார்த்தை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
 
இடப்பங்கீடு முடியாத நிலையில் நேற்று அதிமுக வேட்பாளரை வெளியிட்டதால் தனித்து விடப்பட்டதாக கருதப்படும் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
அதிக இடம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் பாஜகவை கழட்டிவிட அதிமுக திட்டமிட்டுள்ளதாகவும் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக  நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது
 
எனவே பாஜக தனித்து போட்டியிடுமா அல்லது வேறு சில கட்சிகளை இணைத்து போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.