1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (14:19 IST)

அதிமுகவுடன் கூட்டணி இல்லை, ஆனால் தேசிய அளவில் கூட்டணி தொடரும்: அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றாலும் அகில இந்திய அளவில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது
 
பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக சட்ட முன் அறிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை , இருப்பினும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது அதிமுக வுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் என்றும் அகில இந்திய அளவில் எப்போதும்போல் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.