விஜயை பார்க்க விரும்பிய வி.ஐ.பி!.. லண்டன் பயணம் ரத்து?.. ஆளுநர் பேசியது என்ன?..
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகிற 10ம் தேதி லண்டன் செல்லவிருப்பதாக சொல்லப்பட்டது. முதல்வர் விஜய் சமீபத்தில் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் பெறுவவதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் சென்ற வீடியோவும் வெளியானது.
லண்டனில் ஐரோப்பாவை சார்ந்த தொழிலதிபர்களை விஜய் சந்தித்து பேசவிருக்கிறார். மேலும், நடிகரும், ரேஸருமான அஜித்குமார் பங்கேற்கும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் காண்பதற்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தன், விஜயின் லண்டன் பயணம் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. அதாவது, டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வரும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முதல்வர் விஜயை வருகிற 13ம் தேதி சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். விஜய் முதல்வரானதும் அவருக்கு வாழ்த்து சொன்ன முதல் வெளிநாட்டு பிரதமர் இவர்தான்.
ஆனால், அப்போது முதல்வர் விஜய் லண்டனில் இருப்பார் என சொல்லப்பட மலேசிய தூதரக அதிகாரிகள் ஆளுநர் அர்லேக்கரிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. உடனடியாக விஜயிடம் அர்லேக்கர் பேசி உங்கள் லண்டன் பயண திட்டத்தை தள்ளி வையுங்கள் என கேட்டிருக்கிறாராம். வருகிற 13ம் தேதி ஆளுநர் மாளிகையில் முதல்வர் விஜய் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசுவார் எனத்தெரிகிறது.