1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Je Dheepa complaint against his former members

மிரட்டும் கார் டிரைவர்! என் உயிருக்கு ஆபத்து – ஜெ.தீபா பரபரப்பு புகார்

Tamilnadu
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது முன்னாள் கார் டிரைவரும், கட்சி உறுப்பினருமான ராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை தொடங்கினார் ஜெ.தீபா. அப்போது அவரது கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஈ.சி.ஆர் ராமசந்திரன் மற்றும் ராஜா ஆகியோர். இதில் ராஜா முன்னதாக ஜெ.தீபாவிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தவர். கட்சியில் இருந்தபோது அவர்களது நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கட்சியை விடுத்து அரசியலை விட்டு விலகி இருக்கிறார் ஜெ.தீபா. இந்நிலையில் ஈசிஆர் ராமசந்திரனும், டிரைவர் ராஜாவும் அடிக்கடி தீபாவிற்கு செல்போன் மூலமாகவும், நேரடியாகவும் மிரட்டல் விடுத்து வருவதாக ஜெ.தீபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
போலீஸாரின் தொல்லை தாங்க முடியவில்லை…வீடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த குடும்பம்!