1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayalalitha University gets approved in TN Assembly

வேலூர் திருவள்ளுர் பல்கலைக்கழகத்தை பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் !!

TN Assembly
விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

 
விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை சட்ட பேரவையில் தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன்.
 
இது குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். 
 
அதன்படி, விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. வேலூர் திருவள்ளுர் பல்கலைக்கழகத்தை பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது. 
 
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தில் 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
வரதட்சனை குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை – மசோதா நிறைவேற்றம்