ஃபேஸ்புக் இணையதளத்திற்கு தடை ; மக்கள் அவதி.... எங்கு தெரியுமா?
மியான்மரில் பேஸ்புக் இணையதள சேவைகளுக்கும் இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் சமீபத்தில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டு அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பாராளுமன்றத்தை சுற்றிலும் ராணுவ வீரர்கள் காவலுக்கு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒரு பக்கம் மியான்மர் நாட்டில் இராணுவ புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் மியான்மரில் நடந்த தேர்தலில் ஆங் சாங் சூசியின் தேசிய ஜனநாயக கட்சி 476 இடங்களில் வெற்றி 396 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால் ராணுவ கட்சியாக ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி 33 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து அவர்களின் ராணுவம் அதிரடியாக கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில் மக்கள் இணையதொடர்பு சாதனங்களைக் குறைக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் பிப்ரவரி 7 வரை ஃபேஸ்புக்கிற்கு தடைவிதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.