சசிகலாவின் பேச்சுக்கு ஜெயகுமார் பதிலடி !

Sugapriya Prakash| Last Modified புதன், 24 பிப்ரவரி 2021 (13:47 IST)
சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.

 
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த சசிக்கலா இன்று ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்துள்ளார்.
 
அதை தொடர்ந்து பேசிய அவர் “ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும். விரைவில் மக்களை சந்திக்க வருவேன்” என கூறியுள்ளார்.
 
இதற்கு, சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில்தான் உள்ளது எனவும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :