வெற்றிடத்தை நிரப்பவே சசிகலா வந்துள்ளார். பாரதிராஜா அதிரடி பேட்டி

bharathiraja
வெற்றிடத்தை நிரப்பவே சசிகலா வந்துள்ளார். பாரதிராஜா
siva| Last Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (12:17 IST)
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த பின்னர் தமிழக அரசியலில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை என்றும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும் பலர் கருத்து கூறினார்

கமலஹாசன் ரஜினிகாந்த் உள்பட பலர் கூறிய இந்த வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் சசிகலாவை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா ’அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக தான் சசிகலா வந்துள்ளார் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சற்றுமுன்னர் சரத்குமார் சசிகலாவை சந்தித்த நிலையில் பாரதிராஜாவும் சந்தித்து உள்ளதை அடுத்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தேர்தல் வருவதற்குள் என்னென்ன திருப்பங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :