தினம் ஒரு புத்தக பரிந்துரை.. எல்லாம் லைவ் வாங்க! – கமல்ஹாசன் அழைப்பு!
ஏற்கனவே பிக்பாஸ் மூலம் புத்தகங்கள் சிலவற்றை அறிமுகம் செய்த கமல்ஹாசன் புத்தக கண்காட்சிக்காக மேலும் சில புத்தகங்களை அறிமுகம் செய்வதாக கூறியுள்ளார்.
சென்னையில் புத்தக திருவிழா இன்று தொடங்கி மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரிந்துரைத்த புத்தகங்களை விற்க மய்யம் பதிப்பகம் ஸ்டால் அமைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “சென்னை புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது. அன்றாடம் ஒரு நூலை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் நேரலையில் பரிந்துரைக்க இருக்கிறேன். வாருங்கள் நண்பர்களே, இன்று மதியம் 12.30 மணிக்கு புத்தகங்களோடு உரையாடலைத் துவங்குவோம்.” என கூறியுள்ளார்.