சசிகலாவை சந்தித்தது ஏன்? சரத்குமார் பேட்டி!

Sarathkumar
சசிகலாவை சந்தித்தது ஏன்? சரத்குமார் பேட்டி!
siva| Last Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (12:03 IST)
சசிகலாவை சற்றுமுன்னர் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் பிரபல நடிகருமான சரத்குமார் சந்தித்தார் என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம். அதிமுக கூட்டணியில் இருக்கும் சரத்குமார் திடீரென சசிகலாவை சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் சசிகலாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று என்ற அடிப்படையில் சசிகலாவை நாங்கள் சந்தித்தோம். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்கவே அவரை நான் சந்தித்தேன்

10 ஆண்டுகளாக நான் அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறேன். அந்த வகையில் அவருடனான நட்பின் அடிப்படையில் அவரது உடல்நிலையை உடல்நிலை குறித்து கேட்பதற்காகவே சந்தித்தோம். என்று கூறினார்
இதேபோல் ராதிகா சரத்குமார் இன்று சந்திப்பு குறித்து கூறிய போது ’ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக சசிகலாவின் உடல்நலன் குறித்து விசாரிக்கவே சந்தித்தோம்’ என்றும் வேறு எந்த முக்கியத்துவமும் இந்த சந்திப்பில் இல்லை என்றும் கூறியுள்ளார்

இருப்பினும் இந்த சந்திப்பின் போது இருவரும் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :