1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar says oscar will give to senthil balaji

செந்தில் பாலாஜியின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் நெஞ்சுவலி என்று கூறியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் 30 சதவீதம் அடைப்பிற்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான் என்றும் இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்
 
மேலும் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் என்று கூறிய ஜெயக்குமார் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது புகார் வந்தவுடன் அவரை அமைச்சரவையில் இருந்து ஜெயலலிதா நீக்கினார் என்றும் ஆனால்  செந்தில் பாலாஜி மிது குற்றச்சாட்டு இருந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர்தான் முதலமைச்சர் முக ஸ்டாலின் என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் ரூ.360 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.44 ஆயிரத்தை நெருங்கியதால் மகிழ்ச்சி..!