1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (07:11 IST)

செந்தில் பாலாஜியின் துறைகள் யார் யாருக்கு கொடுக்கப்படுகிறது? பரபரப்பு தகவல்..!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் மருத்துவமனையில் புழல் சிறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மின்சார துறை, மதுவிலக்கு ஆயத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய முக்கிய துறைகளை கையில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜியின் துறைகள் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மின்சார துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கவனிப்பார் என்றும் ஊரக வளர்ச்சித் துறையை அமைச்சர் ஐ பெரியசாமி கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகளை முதலமைச்சரே கவனிப்பார் என்றும் ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva