தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவில் 2 பாஜக எம்.எல்.ஏக்களா? நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது: எடப்பாடி பழனிசாமி
- 2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாகப் பேசப்படும் கட்சி பாஜக - பிரதமர் மோடி
- தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்குக் காரணம் பிரதமர் மோடிதான்- அண்ணாமலை
- தமிழகம் வந்தார் பிரதமர் மோடி..! பூக்களை தூவி வரவேற்ற பாஜக தொண்டர்கள்..!
- மிசா சட்டத்தில் கைதானவர்களுக்கு உதவித்தொகை- முதல்வர் அறிவிப்பு
அண்ணாமலை கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!
அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் இன்னும் போனி கூட ஆகவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று கோவையில் அண்ணாமலை முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவில் இணைகிறார்கள் என்ற செய்தி பரவியது. ஆனால் அந்த நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, “அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் ஐக்கியமாகி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் யாரையும் பாஜகவை போன்று வலை வீசி பிடிக்கவில்லை.
அண்ணாமலை என்ற வியாபாரி நேற்று கூட கடை விரித்தார், ஆனால் அந்தக் கடையில் வாங்கதான் ஆட்கள் யாரும் இல்லை. அந்தக் கடைக்கு யாரும் வரகூடவில்லை. அண்ணாமலையின் கடை போனியாகாத கடை. அதுதான் பிஜேபியின் கடை என்று தெரிவித்தார்.
Edited by Siva
