1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (16:10 IST)

தமிழகம் வந்தார் பிரதமர் மோடி..! பூக்களை தூவி வரவேற்ற பாஜக தொண்டர்கள்..!

Modi
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
 
கோவை மாவட்டம்  சூலூர் விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம் வந்த பிரதமரை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி  குமார் ஆகியோர் மலர் கோத்து கொடுத்து வரவேற்றனர். 

விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் பல்லடம் மாதப்பூருக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார். 
 
என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திறந்தவெளி வாகனத்தில் வந்த பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.


அப்போது பாஜக தொண்டர்கள் பூக்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடியுடன் அண்ணாமலை மற்றும் எல். முருகன் ஆகியோர் வாகனத்தில் வந்தனர்.
 
தற்போது நடைபெற்று வரும் பாஜக பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று உள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன், புதிய நீதி கட்சி தலைவர் சண்முகம், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பிரதமரின் வருகையை ஒட்டி பொது கூட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.