மிசா சட்டத்தில் கைதானவர்களுக்கு உதவித்தொகை- முதல்வர் அறிவிப்பு
மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதியத் தொகை மீண்டும் வழங்கப்படும் என முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கார் மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது,
இந்த நிலையில்,மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதியத் தொகை மீண்டும் வழங்கப்படும் என முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கார் மாநிலத்தில் மிசா சட்டம் பிறப்பப்பட்டிருந்த 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையில் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக ஆட்சியில், அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஓய்வூதியம் வழங்கும் வகையில் ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது அது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஓய்வூதியத்திட்டம் பற்றி பேசிய முதல்வர் விஷ்ணு தியோ சாய், மிசா அவசர காலத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு சம்மான் நிதி (ஓய்வூதியத்திட்டம்) மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.