திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (16:52 IST)

2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாகப் பேசப்படும் கட்சி பாஜக - பிரதமர் மோடி

modi
பல்லடம் அருகே பாஜக பொதுக்கூட்டத்தில்  பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி,  2024 ல்  தமிழ்நாட்டில் அதிகமாகப் பேசப்படும் கட்சியாக பாஜக உள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த 2023 ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்டது என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடைபயண்ம இன்று திருப்பூரில்  நிறைவடைந்தது.
 
இந்த  நடைபயணத்தின் நிறைவு விழாவாகவும்,  மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் பிரசார தொடக்கமாகவும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில்  நடந்து வருகிறது. பிரதமர் மோடி, அண்ணாமலை, தமிழருவி மணியன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றுள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சியில்   காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன்,  தமிழ்நாடு பாஜக தலைவர்  அண்ணாமலை ஆகியோர் பேசினார்.
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி,  2024 ல் அதிகமாகப் பேசப்படும் கட்சியாக பாஜக உள்ளது. தமிழ் நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு என் வாழ்த்துகள் என்று கூறினார்.
 
மேலும், தமிழ் நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழ் நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல. அது இதயப்பூர்வமானது என்று தெரிவித்தார்.