திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (16:48 IST)

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்குக் காரணம் பிரதமர் மோடிதான்- அண்ணாமலை

modi - annamalai
கடந்த 2023 ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்டது என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் இன்று திருப்பூரில்  நிறைவடைந்தது.
 
இந்த  நடைபயணத்தின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில்  நடந்து வருகிறது. பிரதமர் மோடி, அண்ணாமலை, தமிழருவி மணியன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றுள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய  மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சரித்திரத்தில் இடம்பெறுள்ளோம். இத்தனை ஆண்டு காலம் எதற்காக காத்திருக்கிறோம் அதைக் கண்டிருக்கிறோம். அடுத்த 60 நாட்கள் முழு அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும். தமிழ் நாட்டில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு  ஓய்வில்லை. தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்குக் காரணம் பிரதமர் மோடிதான் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  2019 ல் செய்த தவற்றை மிஈண்டும் செய்ய போவதில்லை. வரும் மக்களவை தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்று தெரிவித்துள்ளார்.