தொடர்புடைய செய்திகள்
- மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம்! – தமிழக அரசு அரசாணை!
- ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்!
- போட்டியிட்ட அனைவருமே வெற்றியாளர்கள்தான்! – மய்யத்தாருக்கு கமல்ஹாசன் கடிதம்!
- 3வது பெரிய கட்சி நாங்கதான்.. பாஜக இல்ல..! – கே.எஸ்.அழகிரி வாதம்!
- ”இனிமே எதுக்கு வாழணும்.!!?” - அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி!
ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி! – நீதிமன்றம் முடிவு!
திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 19 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் திமுக தொண்டர் ஒருவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி அரை நிர்வாணமாக அழைத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது தொடர்பான மற்றொரு வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் உள்ள ஜெயக்குமார் ஜாமின் கேட்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.
அடுத்த கட்டுரையில்
