புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (12:47 IST)

ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்!

2வது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
கடந்த பிப்ரவரி 19 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் திமுக தொண்டர் ஒருவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி அரை நிர்வாணமாக அழைத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக கூறி ராயபுரத்தில் முன்னதாக ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியது தொடர்பாக தேர்தல் விதிமுறை மீறல், கொரோனா தொற்று பரவும் வகையில் கூட்டம் கூட்டியது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே 2வது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை மறியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜெயக்குமாரை நீதிமன்ற காவல் அறிவிக்கப்பட்டுள்ளது.