மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம்! – தமிழக அரசு அரசாணை!
மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள அபூர்வமானதும், அரிதானதுமான கடற்பசுக்களை பாதுகாக்க பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் வங்க கடல் பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா பகுதியில் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு மற்றும் பலவகை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட உயிரியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் பல காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ரூ.5 கோடி மதிப்பில் பாக் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. முதற்கட்ட ஆய்வு பணிகள் மற்றும் நடவடிக்கைகளுக்காக ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.