விஜயை பார்த்து திமுக பயப்படுகிறது!.. நிர்மலா சீதாராமன் பேட்டி!..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது.. விரைவில் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.. எனவே அரசியல் கட்சிகள் கூட்டணியை அமைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.. திமுக வழக்கம் போல் தனது கூட்டணி கட்சிகளுடனும் தேர்தலை சந்திக்கவிருக்கிறது..
அதிமுக பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறது. மேலும் சில கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையவுள்ளது. ஒருபக்கம் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனித்துப் போட்டியிடுகிறது..
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலுக்கு பின் டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார்.. அப்போது விஜயின் அரசியல் வருகையை பார்த்து பாஜக பயப்படுகிறதா? என நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் சொன்ன நிர்மலா சீதாராமன் விஜயை பார்த்து திமுகதான் பயப்பட வேண்டும்.. திமுக பயப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது..
விஜயின் அரசியல் வருகை, என்.டி.ஏ.வின் பலமான கூட்டணி இதையெல்லாம் பார்த்து திமுக பயப்படுகிறது.. அந்த பயத்தில்தான் திமுக இலவச திட்டங்களை அறிவித்து வருகிறது.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இல்லை.. போதை கலாச்சாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது என பேசியிருக்கிறார்..