புத்திசாலிகள் ஆண்களா? பெண்களா? யுனெஸ்கோ அறிக்கை
கணிணியில் ஆண்கள் புத்திசாலிகளா,பெண்கள் புத்திசாலிகளால் என்பது குறித்து யுனெஸ்கோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 120 நாடுகளில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் எடுக்கப்படும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோ ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிடும்.
அந்த வகையில், முன்பு கணிதத்தில் ஆண் , பெண் ஆகிய இரு பாலரிடம் மிகப்பெரிய அளவு வேறுபாடு இருந்ததாகவும், மாணவிகளைக் காட்டிலும் மாணவர்கள் அதில் சிறந்தவர்களாக இருந்தாக தெரிவித்தனர்.
இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டதாகவும், ஏழை நாடுகளில்கூட பாலிய வேறுபாடு இல்லை எனவும், மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்படுவதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.