1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. james vasanthan comment about tvk government

அத்திப்புழு மாதிரிதான் விஜயின் ஆட்சி!.. அடங்காத ஜேம்ஸ் வசந்தன்!...

james vijay
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். அதேபோல் 60 வருடங்களில் இல்லாத அளவுக்கு கூட்டணி ஆட்சியை விஜய் அமைத்திருக்கிறார். அதாவது, தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் அவர் இடம் கொடுத்திருக்கிறார்..

தவெகவின் அசுர வளர்ச்சியையும், விஜய் முதலமைச்சரானதையும் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.. எனவேதேன் தவெகவியும், முதல்வர் விஜயையும் அவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள் என தவெக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.

ஒருபக்கம் அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் திரைத்துறையை சேர்ந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பா.ரஞ்சித், அமீர் போன்றவர்களும் தவெக ஆட்சியை விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் ‘இப்பவும் என் கணிப்பு தவறவில்லை.. நான் நினைச்சதை விட விஜய் ரொம்ப மோசமா இருக்கார்.. அவரை அந்த இடத்தில் அமர வைத்திருக்கவே கூடாது.. கடந்த மூன்று மாதத்தில் தமிழக அரசில் என்ன நடந்திருக்கு? அதிகாரிகள் அவங்க வேலையை செஞ்சுட்டு இருக்கறதுனால எல்லாம் அப்படியே போயிட்டு இருக்கு.. எதுவும் முன்னேறல.. எதுவும் மாறல..

விஜயின் ஆட்சி அத்திப்பூழு மாதிரிதான்.. அத்திப்பழம் மலரா இருக்கும் போதே புழு உருவாகிடும்.. அந்த புழுவோட வாழ்க்கை அங்கேயே தொடங்கி அங்கேயே முடிஞ்சிடும்.. அப்படிதான் இந்த அரசும் உயிரோடு இருக்கு.. ஆனா செயல்படவே இல்லை.. யாருக்கும் எந்த பயனும் இல்லை’ எனக் கூறியிருக்கிறார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
விபத்தை தடுக்க வாகனங்களில் V2V வசதி!.. அடுத்த வருஷம் முதல் கட்டாயம்!..