கட்டிடங்களுக்கு விரைவில் அனுமதி!.. AI யூஸ் பண்ணுங்க!.. முதல்வர் விஜய் ஆர்டர்!..
நடிகர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். முதலமைச்சர் பதவி என்பது அவருக்கு முதல் அனுபவம் என்றாலும் பலவற்றையும் கேட்டறிந்து பல விஷயங்களையும் அவர் செயல்படுத்தி வருகிறார். லஞ்ச ஊழல் இல்லாத தமிழகத்தை அமைப்போம் என தொடர்ந்து கூறி வருகிறார்.
கரூரில் பேசிய போது கூட அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள்.. இது விஜயின் அரசு.. என் தம்பி அரசு என் அண்ணன் அரசு.. என் மகன் விஜயின் அரசு என்று சொல்லுங்கள் என்று கூறினார். இந்நிலையில்தான் புதிதாக கட்டப்படும் கட்டிடடங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஒரு முக்கிய அறிவுரையை அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.
கட்டிட அனுமதி வழங்குவதை எளிதாக்கும் வகையில் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மென்பொருளை உருவாக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. துறைரீதியான ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் விஜய் நடத்திவரும் நிலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆய்வு கூட்டத்தில் இந்த கருத்தை அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதோடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பழுதான 28 ஆயிரம் வீடுகளை உடனடியாக மறு கட்டுமானம் செய்யவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.