1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. It will rain next 48 days in tn and kerala

தமிழகத்திற்கு அடுத்த 45 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Tamilnadu
தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 45 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 
தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே இரு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதோடு, வருகிற 7ம் தேதி ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 45 நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
அ.தி.மு.கவை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறாரா துணைமுதல்வர்...?