1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (08:43 IST)

சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்துவாங்கும் கனமழை

சென்னை புறநகர் பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் சில தினங்களாக காலை 7 மணி முதலே மண்டையை பிளக்கும் அளவிற்கு வெளியில் அடித்து வந்தது. இதனால் வெயிலை தாங்கமுடியாமல் மக்கள் இருந்து வந்தனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். நேற்று முதல் தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 
சென்னையில் பல இடங்களில் விடிய விடிய கன மழை பெய்தது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. வீட்டிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. வேலைக்கு செல்லும் மக்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.