வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 அக்டோபர் 2018 (11:33 IST)

ரெட் அலர்ட் என்றால் என்ன ? - தெரிந்து கொள்ளுங்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து அக்டோபர் 7-ந்தேதி மிக அதீத கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

 
கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசிக்க இருக்கிறார். தமிழகத்தைப் போலவே கேரள மாவட்டங்களான இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
 
இந்நிலையில், ரெட் அலர்ட் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம். 
 
அதாவது, மழை பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிடும் போது சில நிறங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தி வருகிரது.
 
அதன்படி, முன்னெச்சரிக்கைக்கு பச்சை நிறத்தை அறிவித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என அர்த்தமாம். அதேபோல், நீல நிற எச்சரிக்கையை அறிவித்தால் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்த்தம். மேலும், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்தால் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவப்பு நிறத்தை (ரெட் அலார்ட்) அறிவித்தால் வானிலை மையம் வெளியிட்ட மழை எச்சரிக்கை வரை படத்தில் எந்தெந்த பகுதிகளில் சிவப்பு நிறம் இடம் பெற்றுள்ளதோ அந்த பகுதிகளில் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அர்த்தம் என்பது தெரியவந்துள்ளது.