1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. it may in five districts in tamilnadu next three days

5 மாவட்டங்களில் 3 நாள் கனமழை பெய்யும்!.. வானிலை மையம் அப்டேட்!...

rain
21.8.2026 இன்று முதல் வருகிற 23.8.2026 வரை 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிரம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் வருகிற 24 மற்றும் 25 தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன்!. சவுக்கு சங்கர் ஒரு கோடி தரவேண்டும்!.. அருண் ஐபிஎஸ் வழக்கு!...