1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 39 people died in china water flood

சீனாவில் கடும் மழை!.. வெள்ளத்தில் சிக்கி 39 பேர் மரணம்!...

china
கடந்த சில நாட்களாகவே சீனாவில் கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக தென் சீனாவில் உள்ள குவாங்சி பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதிலும் சில இடங்களில் 90 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. எனவே, நானிங் நகரில் உள்ள அணை நிரம்பியது. அதன்பின் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

இதன் காரணமாக 29 பேர் உயிரிழந்ததாக அந்த நகரத்தின் துணை மேயர் ஏற்கனவே கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் மற்ற வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை மொத்தம் 39 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்..

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் பாம்பு பண்ணையிலிருந்து 900 பாம்புகள் வெளியேறி வெள்ளத்தில் கலந்து விட்டதால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள். மேலும் மீண்டும் அதிக கன மழை பெய்யும் என  வானிலை மையம் அறிவித்ருப்பதால் அந்த பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
திருமாவளவனை நான் கலாய்க்கல!. தப்பாருந்தா மன்னிச்சிடுங்க.. வைகோ பல்டி!....