1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Is uncapped player rule bring for dhoni ipl president answer

தோனிக்காகதான் அன்கேப்ட் ப்ளேயர் விதி கொண்டுவரப் பட்டதா?... ஐபிஎல் தலைவர் பதில்!

தோனி
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது.

இந்நிலையில்தான் டிசம்பர் மாதத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த விதியால் தோனி கிட்டத்தட்ட அடுத்த சீசனில் ஆடுவது உறுதி என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தோனிக்காகதான் இந்த விதியே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபற்றி பேசியுள்ள ஐபிஎல் தலைவர் அருண் துமால் “தோனி கேப்டு வீரராக இருந்தாலும், அன்கேப்டு வீரராக இருந்தாலும், அவரை எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும். அதனால் இந்த அன்கேப்டு விதிக்குள் அவர் பொருந்தமாட்டார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth