தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் ஷர்மா ஏலத்துக்கு வந்தால் இதுதான் நடக்கும் -ஹர்பஜன் சிங் பதில்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… சில போட்டிகளை இழக்கும் ரோஹித் ஷர்மா!
- ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!
- இரண்டே நாளில் போட்டியை வென்றது எப்படி?... கேப்டன் ரோஹித் ஷர்மா சொன்ன காரணம்!
- மீண்டும் கேப்டன்சியைத் துறந்த பாபர் அசாம்… என்ன நடக்குது பாகிஸ்தான் கிரிக்கெட்டில்?
தெலங்கானா காவல்துறையில் DSP பொறுப்பு… சிராஜுக்குக் கிடைத்த கௌரவம்!
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால் டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெற்றார். அவர் இடம்பெற்ற இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போதே தெலங்கானா மாநில முதல்வர் அவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சையும் அவர் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தெலங்கானா மாநில காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. சமீபத்தில் அவர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இது ஒரு கௌரவ பொறுப்பாக அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிராஜ், தெலங்கானா மாநில அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.