வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (14:23 IST)

நடிகர் சங்க கட்டிடத்திற்கு தடை உள்ளதா? நடிகர் நாசர் விளக்கம்

nasar, vishal
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம் இன்று நடிகர் நாசர் தலைமையில்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது, அதன்படி இன்று  காலையில் கூட்டம் தொடங்கியது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர்,  நடிகர் சங்க கட்டிடம் இந்த ஆண்டு நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை….எனவும்,   நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார்.

இது தமிழ் சினிமா  நடிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக பேசிய நடிகர் விஷால், ‘’நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த உடன் அந்த கட்டிடத்தில்தான் என் திருமணம் நடக்கும்’’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.