1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (07:52 IST)

WWE வீரர் ஜான் சீனாவை சந்தித்த கார்த்தி… இணையத்தில் வைரலான போட்டோ!

கார்த்தி இப்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் ஜப்பான் படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் ஐதராபாத்தில் நடக்கும் ‘சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்கிற பெயரில் நடக்கும் WWE தொடரில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதில் 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்ற ஜான் சீனாவும் கலந்துகொள்ள இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அந்த புகைப்படத்தைப் பகிர்ந்த கார்த்தி “உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. மிகவும் அன்பாக நடந்து கொண்டீர்கள். உங்களை சுற்றி இருந்த அனைவரையும் சிறப்பாக உணரவைத்தீர்கள்” எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.