செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (13:34 IST)

நடிகர் சங்க கட்டிடத்தில் தான் என் திருமணம்- நடிகர் விஷால்

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த உடன் அந்த கட்டிடத்தில்தான் என் திருமணம் நடக்கும் என்று   நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது பொதுக்குழு கூட்டம் இன்று நடிகர் நாசர் தலைமையில்  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது, அதன்படி இன்று  காலையில் கூட்டம் தொடங்கியது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் விஷால்,  ''எனது திருமணம் பற்றி வெளியாகி வரும் தகவல்களில் உண்மையில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த உடன் அந்த கட்டிடத்தில்தான் என் திருமணம் நடக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டிமுடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.