செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 டிசம்பர் 2025 (08:35 IST)

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு சுமார் 70 நாட்களுக்கு பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று மீண்டும் தனது அரசியல் பொதுக்கூட்டத்தை தொடங்க உள்ளார். இந்த கூட்டம் புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் மூலம், விஜய் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை ஆரம்பிக்கிறார். கூட்டத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையை கருத்தில் கொண்டு, பல்வேறு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் த.வெ.க. தொண்டர்களுக்கு, க்யூ.ஆர். குறியீடு அச்சிடப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை முன்னிட்டு, தொண்டர்கள் மரங்கள், சுவர்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறுவதோ அல்லது ஏதேனும் அபாயம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
புதுச்சேரி அரசு இந்த கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும், புதுச்சேரியை சேர்ந்த த.வெ.க. தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், தமிழ்நாட்டை சேர்ந்த தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள், கூட்டத்தின்போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், அதேசமயம் அரசியல் ரீதியான கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்காகவும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva