நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பணி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீஸ் இன்று தாக்கல் செய்யப்படலாம் என இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு, தி.மு.க. உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே வலியுறுத்தினர். இருப்பினும், சபாநாயகர் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த காரணத்தினால், இந்தியா கூட்டணி தற்போது நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான தீர்மான நோட்டீஸை தாக்கல் செய்ய, குறைந்தது 100 மக்களவை உறுப்பினர்கள் அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் கையெழுத்து தேவை. இந்த எண்ணிக்கையில், தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இந்தியா கூட்டணியால் திரட்ட முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva