திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (18:45 IST)

விஷாலின் ’மார்க் ஆண்டனி’ பட ரிலீஸுக்கு தடை- ஐகோர்ட் அதிரடி

mark antony
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. 

இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் செப்டமபர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் சென்னையில் நடந்த  நிலையில், இப்படத்தில் ட்ரைலர் பலரையும் கவர்ந்து பல மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

இந்நிலையில்,  ’மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

அதாவது, பிரபல லைகா நிறுவனத்திற்கு விஷால்  தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை  நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்,  நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.