செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (10:33 IST)

மே 20 முதல், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அட்டவணை வெளியீடு...?

மே 20 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனாவால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில்,  முதல்வர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். ஊரடங்கு முடிந்த பின்னர் தேதி குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
 
இந்நிலையில், மே 20 ஆம் தேதி முதல் 10-வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தேர்வு அட்டவணை வெளியானதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 
ஆனால்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.