10 ஆம் வகுப்புப் பாடங்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு!
இன்று முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட உள்ளன.
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதனால் மார்ச் 27 ஆம் தேதி தொடங்க இருந்த 10 ஆம் தேர்வுகள் தடைபடடன.
இந்நிலையில் இன்னும் நடத்து முடிக்கப்படாமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தமிழக முதல்வர் கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் மாணவர்கள் பயனடையும் வகையில் 10-ஆம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. அது இன்று முதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2 வது வாரத்தில் ஒவ்வொரு தேர்விற்கும் இடைவெளி இல்லாமல் 10 நாட்களுக்குள் பொதுத்தேர்வினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.