தொடர்புடைய செய்திகள்
- 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையால் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியும்'!
- திருந்த மாட்டீங்களா டா... வேதனையில் தமிழக காவல்துறை!!
- 5ஜி டவரால் கொரோனா வைரஸ் பரவுமா? வதந்தியால் ஏற்பட்ட விபரீதம்
- சென்னையில் தங்கி கொரோனாவை பரப்பிய வங்கதேசத்தினர்: அதிர்ச்சித் தகவல்
- கொரோனாவை விட மோசமான அழிவு வரப்போகுது: ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எச்சரிக்கை
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா?
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஏப்.14க்கு பிறகே முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இன்னும் நடத்து முடிக்கப்படாமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஏப்.14க்கு பிறகே முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னரே, சூழ்நிலையை பொறுத்தே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார். ஆனால், மே மாத இறுதியில் தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
