1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (15:53 IST)

மே மாதம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு !!

கொரோனாவால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ள நிலையில் இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  முதல்வர், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.


மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக உள்ளது;
10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  தமிழக பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், மே மாதம் பத்தாம் வகுப்ப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.  10 நாட்களில் பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் இந்த விடுமுறை அதற்குத் தகுந்த வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக பொதுத்தேர்வு நடக்குமா என்பது குறித்த ஐயம் இதன் மூலம் தீர்ந்துள்ளது.