தொடர்புடைய செய்திகள்
- அப்போலோவில் இருந்து ஆளுநருக்கு ஜெ. எழுதிய கடிதம்?
- ஜெயலலிதாவின் இந்த செயல்: கண்டு வியந்த முன்னாள் கவர்னர்!!
- உலகின் மோசமான தாக்குதல்: சோமாலியாவில் 276 பேர் பலி; 300 பேர் காயம்!!
- ஜெ. கைரேகை வழக்கு; தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் விளக்கம்
- மதுசூதனனின் ஒப்புதலின் பேரில் ஜெ.வின் கைரேகை ஏற்கப்பட்டது - முதன்மை செயலாளர் விளக்கம்
ஜெ. மர்ம மரணம் ; டிச. 25ம் தேதி விசாரணை தொடக்கம் : உண்மை வெளியே வருமா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை வருகிற டிசம்பர் மாதம் 25ம் தேதி தொடங்க இருக்கிறது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என எடப்பாடி தரப்பு அறிவித்தது. மேலும், கட்சியிலிருந்து தினகரனையும் விலக்கி வைத்தது. அதனையடுத்து, இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது.
அந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சென்னை எழிலகத்தில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக் கமிஷனின் தலைவராக கடந்த செப்.30ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், இதுவரை விசாரணை தொடங்கப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில், ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை வருகிற டிச.25ம் தேதி தொடங்கும் எனவும், 3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
