1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 18 அக்டோபர் 2017 (11:00 IST)

ஜெயலலிதாவின் இந்த செயல்: கண்டு வியந்த முன்னாள் கவர்னர்!!

ஜெயலலிதாவின் இந்த செயல்: கண்டு வியந்த முன்னாள் கவர்னர்!!
தமிழக பொறுப்பு கவர்னராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். 


 
 
புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது, பின்வருமாறு பேசினார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 
 
நான் கவர்னராக பொறுப்பேற்பதற்காக முதன் முதலில் சென்னை வந்த போது என்னை வரவேற்க ஜெயலலிதா விமான நிலையம் வரமாட்டார் என நினைத்தேன்.
 
ஏனெனில் தலைவர்களை வரவேற்பதற்காக அவர் விமான நிலையம் வருவது மிகவும் அரிது. ஆனால் ஜெயலலிதா விமான நிலையம் வந்து என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு வியப்பை அளித்தது என தெரிவித்தார்.